Saturday, May 28, 2011

கொள்கைக்காக வாழ்வோம்...

உலகில் பலவிதமான மனிதர்கள் வாழ்கின்றனர். அவர்களில் சிலர் தமக்காக வாழ்கின்றனர். சிலர் தமது குடும்பத்திற்காக வாழ்கின்றனர். இன்னும் சிலர் கொள் கைக்காக அல்லது சமூகத்திற்காக வாழ்கின்றனர்.
   தமக்காக வாழ்கின்றவர்களை எடுத்துக் கொண் டால் அவர்களிடம் தம்மைப் பற்றிய மேலெண்ணமும் தாம் நிறைய சம்பாதிக்க வேண்டும். சமூகத்தில் உயர்வாக மதிக்கப்பட வேண்டும். நான் தூயவன், கண்ணியமிக்கவன் போன்ற எண்ணங்களும் அவர்களிடம் காணப்படும். இவர்களை அல்லாஹுத்தஆலா இப்படிக் கூறுகின்றான்: நீங்கள் உங்களைத் தூயவர்களென (கூறிக்) கொள்ளாதீர்கள். உங்களில் தூயவர்கள் யார் என்பதை அவனே நன்கறிவான். (53:32)இதன் மூலம் அல்லாஹ் மனிதர்களின் உள்ளங்களை நன்கறிபவன், அவர்க ளில் தூயவர்களை நன்கறி பவன் என்பது தெளிவாகின்றது. இவர்கள் தங்கள் அயலவர்களையோ குடும்பத்தவர்களையோ சரியாகப் பராம ரிப்பதில்லை. தமது செயற்பாடுகளில் மாத்திரம் மிகவும் கவனமாக இருப் பார்கள். அதேபோல் குடும்பத்திற்காக மட் டும் வாழ்பவர்களை நோக்கினால், அவர்கள் தமது குடும்ப நலனுக்காக பணம், சொத்து சேகரிப்பதிலேயே வாழ்க்கையை கழிப்பார்கள். தனது மனைவி, பிள்ளைகளின் விருப்பத்திற் காக வேண்டி எதையும் செய்யத் துணிவார்கள். அவர்கள் மனைவி, பிள்ளை களுக்காகவே வாழ்வார்கள். அயலவர் களைப் பற்றிய கவலை அவர்களுக்கு இருக்காது. இவ்வாறான மனிதர்களுக்கே நபி (ஸல்) அவர்கள் பின்வருமாறு கூறினார் கள்: பாதி பேரீத்தம் பழத்தை ஸதகா செய்தேனும் நரகத்திலிருந்து உங் களைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள். (புஹாரி)இவ்வாறானவர்கள் வாழ்கின்ற சமூகத்திலே அல்லாஹ்வுக்காகவும் அவனது மார்க்கத்திற்காகவும் வாழ்கின்ற நல்ல மனிதர்கள் இருக்கின்றார் கள். இவர்க ளைப் பற்றி நபி (ஸல்) அவர்கள் இப்படிக் கூறுகிறார்கள்: "அதிக பாவங்கள் செய்கின்ற மக்களுக்கு மத்தியில் வாழக்கூடிய மனிதர் களுக்கு சுபசோபனம் உண்டாகட்டும். இவர்களுக்கு கீழ்படிகின்றவர்களை விட கீழ்படியாதவர்கள் தான் அதிகம்." இவ்வாறு அல்லாஹ்வுக்கு அடி பணிந்து கொள்கைக்காக வாழ்கின்றவர் கள் சொற்பமானவர்களே உள்ளனர். இதுபற்றி அல்லாஹ் அல்குர்ஆனில், "எனது அடியார்களில் சொற்பமானவர் களே எனக்கு நன்றி செலுத்துகிறார்கள்" (34:13) என்று கூறுகின்றான். இவ்வுலகில் கொள்கைக்காக வாழ்ந்த மனிதர்களைப் பட்டியலிட்டுப் பார்க் கின்றபோது அவர்களது வாழ்வு தியாக ங்களாலும் அர்ப்பணங்களாலும் நிரம்பி யிருப்பதைக் காணலாம். காலத்திற்கு காலம் அல்லாஹ்வினால் அனுப்பப் பட்ட நபிமார்களும் ரஸூல்மார்களும் அவர் களில் முதன்மையானவர்கள். மனிதர்களுக்கு நேர்வழி காட்டுவதும் மார்க்கத்தை நிலைநாட்டுவதும் அல் லாஹ்வுக்காக வாழ்வதுமே அவர்களது நோக்கமாக இருந்தது. ஒருமுறை நபி (ஸல்) அவர்கள் அபூதாலிபை நோக்கி இவ்வாறு கூறி னார்கள்: "என் அன்பு பெரிய தந்தையே, அல்லாஹ் மீது ஆணையாக எனது வலது கையில் சூரியனையும் இடது கையில் சந்திரனையும் கொண்டு வந்து வைத்து இந்தத் தூதினை விட்டு விடச் சொன்னாலும் கூட அதனை நான் விட்டுவிட மாட்டேன்."பொதுவாக எல்லா நபிமார்களின் வாழ்விலும் நிறையதியாக நிகழ்வுகள் காணப்படுகின்றன. இப்றாஹீம் (அலை), தனது மகன் இஸ்மாயீல் (அலை) அவர்களை அறுத்துப் பலியிடுமாறு கட்டளை கிடைத்தவுடன் அவரிடம் சென்று, "என் அன்பு மகனே, நிச்சயமாக நான் உங்களை அறுத்துப் பலியிடு வதாக கனவில் கண்டேன். நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள் என்று கேட்டார். அதற்கவர், "என் தந்தையே, நீங்கள் கட்டளையிடப்பட்டபடியே செய்யுங்கள். அல்லாஹ் நாடினால் என்னை நீங்கள் பொறுமையாளர்களில் ஒருவராகக் காண்பீர்கள்" என்று கூறினார். இவ்வாறுதான் கொள்கைக்காக வாழ்ந்த நபிமார்களும் றஸூல்மார்களும் அல்லாஹ்வின் கட்டளைக்குக் கீழ்படிந்தார்கள். அவனுடைய மார்க்கத்தை நிலைநாட்டுவதற்காக தம்மையே அர்ப்பணித்தார்கள். அவர்கள் அற்ப விடயங் களுக்காக தனித்துச் சென்றுவிடவில்லை. நபி (ஸல்) அவர்களின் பயிற்றுவிப்புக்கு உட்பட்ட ஸஹாபாக்கள் இஸ் லாத்தை சுமந்து அதற்காக தமது வாழ்வையே அர்ப்பணித்தார்கள். அவர்களது வாழ்வில் நடந்த ஆயிரக்கணக்கான சம்பவங்களை நாம் அறிவோம். இஸ் லாத்தை ஏற்றதற்காக கொதிக்கும் நீரில் இடப்பட்டார்கள். சமச்சீராக ஒட்ட கங்கள் கட்டப்பட்டு இரு பக்கங்களுக்கு அவற்றை விரட்டி விட்டு உடலைக் கிழித்தார்கள். பாரங்கல்லை உடலில் ஏற்றி, பாலைவன மணலில் புரட்டினார் கள். ஈட்டியால் குத்தப்பட்டார்கள். ஏனெனில் அவர்கள் தமது உயிர்களையும் உடமைகளையும் அல்லாஹ்வுக்குத் தருவதாக அவனுடன் உடன்படிக்கை செய்து கொண்டார்கள். இவ்வாறான நிகழ்வுகளை நவீன காலத்தில் கூட நாம் அறிகின் றோம். ஷஹீத் செய்யித் குத்பை மறந்துவிட முடியாது. 1960களில் இஹ்வானுல் முஸ்லிமூன் அமைப்பைச் சார்ந்தவர்கள் கைதுசெய்யப்பட்டபோது இவரும் கைதுசெய்யப்படுகின்றார். ‘இஸ்லாமிய எழுச்சியின் மைல்கற்கள்’ என்ற நூலை எழுதியதற்காக பலவிதமான சித்திரவதைகளுக்கும் அவர் உட் பட்டார். இறுதியில் தூக்கிலிடப்பட்டார். ஆனால், அவரது கருத்துக்களும் சிந்தனைக ளும் தியாகங்களும் இன்றும் மனித மனங்களில் வாழ்ந்து கொண்டிருக் கின்றன. அதுபோலவே இந்த நூற்றாண்டின் இஸ்லாமிய தஃவா களத்தின் தாயென மதிக்கப்படும் ஸெய்னப் அல் கஸ்ஸாலி அவர்களும் ஓர் உயர்ந்த தியாகி ஆவார். கொள்கைக்காக சிறைவாசம் அனுபவித்த இவரது வாழ்வும் பணிக ளும் இன்றைய பெண்களுக்கு மிகப் பெரும் முன்மாதிரியாகும். தனது தஃவா வாழ்வில் மனவலிமையுடனும் உறுதியுடனும் வீரநடை பயின்ற இவரது வார்த்தைகளைக் கேளுங்கள். "இஸ்லாத்தை நோக்கிய அழைப்பின்றி எந்தவொரு சமூகத்திற்கும் விடிவு கிடையாது. சிறையின் இருட்டறைகளோ சித்திரவதைக் கூடங்களோ, சாட்டை ஏந்தியோரின் வன்முறைகளோ உண்மை உழைப்பாளர்களுக்கு மேலும் மேலும் உறுதியையும் சக்தியையும் பொறுமை யையும் தவிர வேறெதனையும் அதிகரிக்கப் போவதில்லை என்பது நிச்சயம்." அல்லாஹ்வின் மார்க்கத்திற்காக வாழும் கொள்கைவாதிகள் தனித்துச் செல் லல், விலகிப் போதல், சூழல் தாக்கங்களுக்கு உட்படுதல், அற்ப விடயங் களுக்காக சோரம் போதல், குழம்பிப் போதல் போன்றவற்றிற்கு உட்பட மாட் டார்கள். கொள்கைக்காக வாழ்தல் பற்றி, ஷஹீத் செய்யித் குத்ப் அவர்கள், குறிப்பிடும் போது, "நாம் நமக்காக மட்டும் வாழும்போது வாழ்க்கை சுருங்கியதாகவும் நமது மரணத்தோடு வாழ்க்கை முடிவடைவதாகவும் ஆகிவிடுகின்றது. ஆனால், ஒரு சமூகத்திற்காக, ஓர் உயர்ந்த கொள் கைக்காக, பிறருக்காக வாழ் கின்றபோது நமது வாழ்க்கை விரிந்ததாக அமைகின்றது. நமக்காக வாழும் வாழ்வு பிறப்பில் தொடங்கி மரணத்துடன் முடிந்து விடுகின்றது. ஆனால், கொள்கைக்காக வாழ்தல் என்பது, பிறப்புடன் தொடங்கி மரணத்தையும் தாண்டி மறுமை வரை நீள்கின்றது" என்று கூறுகின்றார். எனவே, முதலில் எமது வாழ்வின் அர்த்தம் புரியப்பட வேண்டும். எமது பணிகள் வகுக்கப்பட வேண்டும். இலக்குகள் வரையறுக்கப்பட வேண்டும். ஷரீஆவால் ஒழுங்கமைக்கப்பட்ட அகீதாவால் ஆளப்படுகின்ற இலட்சியத்தை நோக்கிய படையெடுப்பாக எமது வாழ்வு மாறவேண் டும். ஏனெனில், "இலட் சியத்தோடு வாழாத மனிதனால் ஒருபோதும் உண்மையான வெற்றியைக் கண்டுகொள்ள முடியாது" என இமாம் ஹஸனுல் பன்னா (றஹ்) குறிப்பிடு கின்றார். நாம் எமது வாழ்வை இஸ்லாமிய நிழலில் வடிவமைத்துக் கொள் வோம். இஸ்லாத்திற்காக தியாகங்கள், அர்ப்பணங்கள் செய்வோம். நாம் மரணித்தா லும் எமது அர்ப்பணங்களும் தியாகங்களும் எம்மை மனித மனங்களில் உயிர்ப்புடன் வாழச் செய்யும். இன்ஷா அல்லாஹ்.

No comments:

Post a Comment