Sunday, July 22, 2012

கல்குடா டுடே குறித்த எனது விமர்சனங்களுக்கான எதிரொலிகள்

நான் அன்மையில் கல்குடா டுடே குறித்து சில விமர்சனங்களை வெளியிட்டிருந்தேன் அதற்கான அவர்களது மறுப்புகளும் எனது பதில்களையும் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்

கல்குடா டுடே
உங்கள் விமர்சனத்துக்கு நன்றி இர்ஷாத் ஏதோ எங்களால் முடிந்தவற்றை செய்கின்றோம். முடிந்தவரையில் எங்கள் பிழைகளை திருத்திக்கொள்கின்றோம். நீங்கள் நினைப்பது போல் நாங்கள் படித்தவர்கள் இல்லை ஆனால் ஒரு போதும் அநியாயத்துக்கு துணை போகாதவர்கள். இது வரையில் எங்களால் வெளியிடப்பட்ட செய்திகள் ஒன்றும் பொய்யானது இல்லை முடிந்தால் நிறுபியுங்கள் நாங்கள் கல்குடா டுடேயை நிறுத்தி விடுகின்றோம் இந்த சவாலை நீங்கள் ஏற்றுக்கொள்வதற்கு தயாரா? 

ஈ.எல்.எம்.இர்ஷாத்
"உங்களது செய்திகள் சரியோ, பிழையோ நான் அது பற்றி எதுவும் தங்களை விமர்சனம் செய்யவில்லை.. ஆனால் நீங்கள் முஸ்லிமாக இருந்தும் உங்களது எழுத்துக்கள் இஸ்லாமிய வரையரைக்குள் இருக்கின்றதா?? அப்படியில்லையென்றால் அல்லாஹ்விடத்தில் உங்களது செயற்பாடுகளுக்கு என்ன பெறுமானம் இருக்கப் போகின்றது. அல்லாஹ்தான் தீர்ப்பாளன், எத்தனையோ நபர்கள் உங்களால் இழிவுபடுத்தப்பட்டுள்ளனர். அவர்கள் சில வேலை பாவம் செய்திருந்தால் அவர்கள் தவ்பா செய்து மீண்டபின் அவர்களை அல்லாஹ் மன்னிப்பான். ஆனால் இழிவு படுத்திய உங்களை அவர்கள் மன்னிக்கும் வரை அல்லாஹ் மன்னிக்க மாட்டான் என்று நபியவர்கள் கூறியுள்ளார்கள். எனவே எனது விமர்சனங்கள் பிழையா?"

கல்குடா டுடே
நாங்கள் யாரையும் இழிவு படுத்தவில்லை அவர்களும் ஏதோ ஒரு வகையில் சமூகத்துக்கு செய்யும் பிழைகளை வெளியிடுகின்றோம் அது உங்கள் பார்வையில் வேறு விதமாக பட்டால் அதுக்கு நாங்கள் ஒன்றும் செய்ய முடியாது. கண் முன்னே அநியாயம் நடக்கும்போது உங்களைப்போல் பார்த்துக்கொண்டிருக்க முடியாது. எங்களை விர்சிக்கும் அளவுக்கு நீங்களும் ஒன்றும் பொரிதாக செய்து விடவுமில்லை, அந்த தகுதியும் உங்களுக்கில்லை எங்களை எங்கள் பாட்டிற்கு விடுங்கள் நல்லதோ, கெட்டதோ கல்குடா டுடே ஒன்று இருப்பதால்தான் சமூக துரோகிகள் அடங்கிப்போய்யுள்ளார்கள். உங்கள் பார்வையில் எங்களால் இழிவு படுத்தப்பட்டவர்களில் எவரும் உன்மையானவர்கள் இல்லை முடிந்தால் நிறுபியுங்கள் நாங்கள் கல்குடா டுடேயை நிறுத்தி விடுகின்றோம் இந்த சவாலை நீங்கள் ஏற்றுக்கொள்வதற்கு தயாரா?

1 comment: