Wednesday, October 31, 2012

முஸ்லிம் சமூகத்தின் தஃவாக் களங்கள் குறித்தான ஒரு கவணயீர்ப்பு

இன்றைய சமூகக் களத்தில் பல இஸ்லாமிய அமைப்புகள் பிரச்சாரப் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றன. அவை அனைத்தும் சுவர்கத்தை நோக்கிய அழைப்பில் தன்னால் முடியுமான விதத்தில் மும்முரமாக ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றன. ஆனால் அவை தமக்கிடையே அடிக்கடி ஏற்படும் கருத்து வேருபாடுகளினால் மிகப் பாரிய ஆபத்தை எதிர் நோக்கியிருக்கின்றன.

தனி மனிதனை துாய்மைப் படுத்த வேண்டிய, குடும்பங்களை சீர்படுத்த வேண்டிய, சமூகத்தை ஒற்றுமைப் படுத்த வேண்டிய இஸ்லாமிய இயக்கங்கள் சமூகப் பிளவுக்கும் குடும்பங்களில் விரிசல்கள் ஏற்படுவதற்கும், தனி மனிதர்களின் தனிப்பட்ட விவகாரங்கள் கிளரப்படுவதற்கும் காரணமாகிவிட்ட அவல நிலை இன்றை எமது சமூகம் எதிர்கொள்ளும் மிகப் பெரிய ஆபத்தாகும்.

அவை தமக்குக்குள் ஏற்பட்டுள்ள சில பிக்ஹ் ரீதியான கருத்து வேருபாடுகளினால் முறன்பட்டு தமது இலக்கு, இலட்சியங்களை மறந்து ஒன்றை யொன்று எதிர்த்துப் போட்டியிடும் அரசியல் கட்சிகளைப் போல மாறிவிட்டன.

தான் மட்டும்தான் நேர்வழியில் நிலைத்திருப்பதாகவும் தமது அங்கத்தவர்கள் மாத்திரம்தான் சுவர்கம் நுழைவார்கள் என்றும் ஏனைய இயக்கங்கள் வழிகேட்டில் இருப்பதாகவும் ஒவ்வொரு இயக்கமும் நினைத்துக் கொண்டிருக்கின்றன. இவ்வாறு சொல்வதன் மூலம் சமூகக் களத்தில் உள்ள சகல இஸ்லாமிய அமைப்புக்களையும் குற்றம் சுமத்தவில்லை மாறாக குறிப்பிட்ட சில தஃவா அமைப்புக்களின் போக்கினை பக்கச்சார்பின்றி, நடுநிலையாக கவலையோடு யதார்த்தத்தை புரிந்து கொள்ளவே இக் கட்டுரை எழுதப்பட்டது என்பதை வாசகர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

தேர்தல் காலங்களில் அரசியல் கட்சிகள் எவ்வாறு போட்டி போட்டுக் கொண்டு மேடைகளை அமைத்து தேர்தல் பிரச்சாரம் என்ற போர்வையில் அடுத்த கட்சியினை, அதன் அங்கத்தவர்களை அவர்களது தனிப்பட்ட, குடும்ப விவகாரங்களை,  ரகசியங்களை எவ்வாறு வெளிப்படுத்துமோ அவ்வாரே இன்றைய சில இஸ்லாமிய அமைப்புக்களின் போக்கும் அமைந்திருக்கின்றன.

சில பிரதேசங்களில் போதாக்குறைக்கு வானொழி ஊடகங்களை அமைத்து அடுத்த அமைப்பின் தவருகளை பிரச்சாரம் செய்யும் போக்கும் காணப்படுகின்றது.

தஃவா அமைப்புக்களின் குறைபாடுகளில் சுய விமர்சனம் இல்லாமை மிகப் பிரதானமானது. இஸ்லாமிய இயக்கங்கள் தன்னுள் அடிக்கடி சில கேள்விகளைக் கேட்டுக் கொள்ள வேண்டியிருக்கின்றன.
  1. தமது தஃவா அல்லாஹ்வின் திருப்தியை மட்டும் இலக்காகக் கொண்டு இருக்கின்றதுவா?
  2. தமது தஃவாமுழு சமூகத்தையும் உள்ளடக்கியதாக, சமூகத்தை ஜக்கியப் படுத்துவதாக இருக்கின்றதுவா? அல்லது கூருபடுத்தி பிளவுகளை உண்டு பண்னுவதாக, மக்களை குளப்பத்திற்குள்ளாக்குவதாக அமைந்திருக்கின்றதுவா?
  3.  நாம்தான் சத்தியத்தில் இருக்கின்றோம் நமது தஃவா மாத்திரம்தான் புனிதமானது என்ற பெருமைத்தனம் இருக்கின்றதுவா?
  4. நாம் மாத்திரம்தான் சுவர்க்கத்தை நோக்கி அழைக்கின்றோம் என்ற இருமார்ப்புணர்வு ஏற்படுகின்றதுவா?
என்ற கேள்விளை கேட்டுக் கொள்ள வேண்டியிருக்கின்றது. ஏனெனில் நம்மை நாம் அப்படித்தான் நினைத்துக் கொண்டிருக்கின்றோம்.

இப்படியான எம்மவர்களைப் பார்த்து அல்லாஹ் கூருகின்றான் “நீங்கள் உங்களைத் துாயவர்களென (பெருமை கூறி)க் கொள்ளாதீர்கள், உங்களில் யாரென்பதை (அல்லாஹ்வாகிய) அவனே நன்கறிவான். (53்32)”

அதே போன்று நிதானம் இன்மையும், அவசரமும், அறிவை மிகைக்கும் உணர்ச்சி போன்றவைகளையும் இஸ்லாமிய இயக்கங்களின் குறைபாடாக இஸ்லாமிய அரிஞர்கள் சுட்டிக் காட்டுவர். இங்கு “அறிவுப் பார்வைகளால் உணர்சிகளின் எல்லை மீறல்களுக்கு கடிவாளமிடுங்கள்” என்ற ஓர் அரிஞரின் கூற்று நினைவு கூறத்தக்கது.

இன்று தஃவாவில் தமது வார்தைப் பிரயோகங்கள் எப்படியிருக்கின்றது.  அழகான வார்த்தைகளைக் கொண்டு பேசுகின்றோமா? இல்லை
எமது கருத்தை ஏற்க மறுக்கும் சகோதரனை காபிரைப் போல பார்கிறோம். ஷைத்தான்கள், யஹுதி, நஸாராக்கள் என்றெல்லாம் அழைக்கின்றோம் ஆனால் அல்லாஹ் காபிர்களைக் கூட காபிர் என்று அதிகமாக அழைக்க விலைலை மனிதர்களே, அடியார்களே, வேதம் கொடுக்கப்பட்டவர்ளே, ஆதமுடைய மக்களே என்றழைக்கின்றான். அன்னியர்களைக் கூட அழகான முறையில் அல்லாஹ் அழைக்கும் போது நாம் எமது முஸ்லிம் சகோதரர்களை எப்படி அழைக்க வேண்டும்.

எனவே வஹாபிகள், பன்னாக்கள், மௌதுாதிகள் என்றல்லாம் இஸ்லாமிய சகோதரத்துவத்தை எள்ளிநகையாடுகின்ற வார்தைப் பிரயோகங்களைக் கொண்டு அழைப்பதை நாம் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

எனவே தஃவாப் பாதையில் உழைக்கும் அன்பின் இஸ்லாமிய சகோதரர்களே மேற்குறிப்பிட்டவாறு எமது கொள்கைகள், செயற்திட்டங்கள் இல்லாவிட்டாலும் சில வேலை எமது எண்ணமும் செயற்பாடும் அப்படித்தான் அமைந்திருக்கின்றது.

கருத்து வேருபாடு என்பது பிரச்சினைக்கும் சச்சரவுக்குமான விடயமல்ல அதனால் மக்களிடையே கருத்துக் குழப்பம் ஏற்பட்டு, சமூகப்பிளவுகள் உண்டாதல் எனபதுதான் இங்கு பிரச்சினை. இம் முறன்பாடு அன்னியர்களைக் கூட இஸ்லாத்தை விட்டு விரண்டோடச் செய்யும் விதமாக பூதாகரப்படுத்தப்படுவதுதான் வேதனைக்குறியது.

குறித்த கிளைப்பிரச்சினை பற்றி பேசக் கூடாது, ஆய்வு செய்யக் கூடாது என்று நான் சொல்ல வில்லை. மாறாக அது பற்றி தர்கிப்பது, முறன்படுவது, விவாதிப்பதுவே எமது முழு நேர தஃவாவாக மாறிவிடக்கூடாது. சில நேரம் அவை தீர்வு காணப்பட வேண்டிய பிரச்சினையாக இருக்கலாம். அதை பண்பாடாகவும் விட்டுக் கொடுப்போடும், சகிப்புத்தண்மையோடும் அணுகலாம்.


இது பற்றி கலாநிதி யுசுப் அல் கர்ளாவி அவர்கள் கூரும் போது “சமூகப்பரப்பில் எது மிக முக்கிய பிரச்சினையோ அதில் அனைத்து இயக்கங்களும் ஒரே அணிக்கு வரவேண்டும் சில பொதுவான செயற்பாட்டுத்தளத்தில் இணைந்து செயலாற்றுவதற்கான முனைப்பும், முயற்சியும் இன்றியமையாதவை. இன்று யஹுதி, நஸாராக்கள், மற்றும் மதச்சார்பற்ற முகாம்கள் அனைத்தும் இஸ்லாத்தை வேரறுப்பதில் ஒரேயணிக்கு வந்துவிட்டன. ஆனால் அல்லாஹ்வுக்காவும் அவனது மார்கத்திற்காகவும் உழைக்கும் நாம் ஏன் நமது கருத்துவேறுபாடுகளை பிளவுகளுக்கு காரணியாக ஆக்கிக் கொண்டு்ள்ளோம்“ என்கிறார்.

எனவே எப்பொழுதும் பிளவுகளைக் கூர்மைப் படுத்தாமல் பொது விடயங்களில் இணைந்து செயலாற்றுவதற்கான புள்ளியை நாம் இணங்கான வேண்டும். “அல்லாஹ் அவனது பாதையில் அடுக்கப்பட்ட கற்களைப் போன்று ஒரேயணியில் நின்று போராடுகின்றவர்களையே விருப்புகின்றான்.” (அஸ்ஸப்-03)

எனவே கருத்தொருமைப்பட்ட விடயங்களில் பரஸ்பரம் ஒத்துழைப் போடும், கருத்து முரன்பாடான விடயங்களில் பரஸ்பரம் விட்டுக் கொடுப்போடும் செயற்பட தயாராகுவோம்.

நல்லவற்றை நல்ல வழியினுடாக அடைந்து கொள்ள அல்லாஹ் வழிசெய்வானாக... அவனது பாதையில் எமது பாதங்களை நிலைத்திருக்கச் செய்வானாக... அல்லாஹ் போதுமானவன்

1 comment: