Sunday, April 22, 2012

ஹமாஸ் இயக்கம்... யார் இவர்கள்?

ஹமாஸ் (Ḥamas,  حركة حماس அல்லது Ḥarakat al-Muqawama al-Islamiyya "இஸ்லாமிய எதிர்ப்பு இயக்கம்") எனப்படுவது பலஸ்தீன இஸ்லாமிய இயக்கமும் பாலஸ்தீனத்தில் அதிகூடிய இடங்களைக் கைப்பற்றியுள்ள அரசியல் கட்சியும் ஆகும்.
ஹமாஸ் இயக்கம் 1987  ஆம் ஆண்டு ஷேக் அஹமத் யாஸீன் என்பவரால் ஆரம்பிக்கப்பட்டது. 1948 இல் சட்டவிரோதமாக உருவாக்கப்பட்ட இஸ்ரேல் இற்கு எதிராக பல  இராணுவ ரீதியிலான தாக்குதல்களை மேற்கொள்ளும் ஹமாஸ் அந்நாட்டினை முற்றாக அழிப்பதை தனது இலக்காகக் கொண்டுள்ளது. அவ்வியக்கம் பலஸ்தீனத்திற்குள் பல சமூக கலாசார அரசியல் வேலைத்திட்டங்களை  முன்னெடுத்து நடத்திச் செல்லுகின்றது. இதனால் இது பாலஸ்தீனர்களிடையே மிகுந்த செல்வாக்கைக் கொண்டுள்ளது
இஸ்ரேல் நாட்டைப் பாலஸ்தீனர்களுக்கு மீளப் பெற்றுக்கொடுத்து  பலஸ்தீனை இஸ்லாமியக் குடியரசாக மாற்றுவதே ஹமாசின் முக்கிய குறிக்கோள் ஆகும்.
PLO தலைவர் யாசிர் அரபாத் இறந்த நாள் தொடக்கம் அங்கு நடந்த இடைத்தேர்தல்களில் ஹமாஸ் இயக்கம் பல வெற்றிகளைப் பெற்று வந்தது.ஜனவரி 2006 இல் 132 தொகுதிகளுக்கு நடந்த பொதுத் தேர்தல்களில் ஹமாஸ் 76 இடங்களைப் பெற்று பெரு வெற்றி பெற்றது.
உலகின் மிகப் பெரிய இஸ்லாமிய இயக்கமான அல்-இஹ்வானுல் முஸ்லிமீன் இயக்கத்தின் பலஸ்தீன நாட்டுப் பிரிவாகவே ஹமாஸ் இயங்குகின்றது. தேர்தலில் மக்கள் செல்வாக்கைப் பெற்றதில் இருந்து தான் ஒரு மக்கள் பலம் கொண்ட நடுநிலை இஸ்லாமிய இயக்கம் என்பதை உலகிற்கு புரிய வைத்தது. உலகின் பல பாகங்களிலும் உள்ள இஸ்லாமியர்கள்  அவ்வியக்கத்திற்கு ஆதரவளிப்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment