Wednesday, June 27, 2012

இஹ்வான்களின் புதிய உலக ஒழுங்கு

(ஈ.எல்.எம்.இர்ஷாத்)
ஜமாதுல் இஹ்வானுல் முஸ்லிமீன் ஒர் சர்வதேச இஸ்லாமிய இயக்கம், இஸ்லாம் என்பது முழுமையான வாழ்கைத் திட்டம், அது மனித சமூகத்தின் அனைத்து துறைகளுக்கும் வழிகாட்டுகிறது, சட்டமியற்றும் அதிகாரம் இறைவனையே சாரும், உலகிற்கு வழிகாட்ட இறைசட்டங்களே பொருத்தமானது என்ற கொள்கையுடையவர்களே இஹ்வான்கள். எனவே இஸ்லாமிய போதனைகளும் முழுமையான வடிவிலே வழங்கப்பட வேண்டும் என்ற போக்குடையவர்கள்


இவ்வியக்கம் எகிப்தில் 1924 ஆம் ஆண்டு இமாம் ஹஸனுல் பன்னா (ரஹ்) அவர்களினால் 6 பேர்களுடன் ஆரம்பிக்கப்பட்டது, குறுகிய காலத்திலேயே அரசினால் தடைசெய்யப்பட்ட இஹ்வான்கள், ஆரம்பம் முதலே இஸ்ரேலுக்கெதிரான எதிர்ப்புப் போராட்டத்தை முன்கொண்டு சென்றனர். இன்று உலகின் 100க்கும் அதிகமான நாடுகளில் இயங்குகின்ற இவர்கள் சர்வதேச ரீதியான நிகழ்சி நிரலைக் கொண்டவர்கள், உலகம் தழுவிய ஜனநாயக மாற்றத்தை எதிர்பார்ப்பவர்கள், அதற்காக உழைத்தவர்கள், அதற்காகவே தங்களது உயிர்களைக் கூட அர்ப்பணித்தவர்கள்.

அரசியல் என்பது இஸ்லாத்தில் தவிர்க முடியாத ஒரு பகுதி எனக்கருதும் இவர்கள், அரபு-இஸ்லாமிய நாடுகளில் அரசியல் கட்சிகளையும் ஏற்படுத்தி பல நாடுகளில் ஆட்சியின் உயர்பீடத்திற்கே வந்துள்ளனர். இவர்களின் மிதவாத அரசியல் செயற்பாடுகளுக்கு உலகலவில் பெறும் வரவேற்பும் இறுக்கின்றது. பலஸ்தீனில் உள்ள ஹமாஸ் அரசாங்கம், துனிஸியாவில் இயங்கும் நஹ்ழா இஸ்லாமிய இயக்கம் போன்றன இஹ்வான்களே,

நுனுக்கமான திட்டமிடல்களும், தொடர்ந்தேற்சியான பயிற்றுவிப்பு முறைகளும், இறை உணர்வு கொண்ட செயற்பாடுகளும், இஹ்வான்களின் சிறப்பம்சங்கள்.
எகிப்திய வரலாற்றில் எத்தனையோ இஹ்வான்களின் உயிர்கள் பறிக்கப்பட்டுள்ளன. கொடுங்கோளன், நாஸர் தொடக்கம் முபாரக் வரை அவர்கள் சிந்திய உதிரங்களே இன்று உரமாக மாறி எகிப்தின் போக்கையே திசைதிருப்பியிருக்கின்றன. அரபு-இஸ்லாமிய உலகில் வாழும் மாற்றத்தை எதிர்பார்கும் மக்களைப் பொருத்தவரை எகிப்தியஇஹ்வான்களின் வெற்றி என்பது ஒட்டு மொத்த பிராந்தியத்துக்கும் கிடைத்த வெற்றியாகும். உண்மையில் புதிய உலக ஓழுங்கிலே தாக்கம் செலுத்தக்கூடிய அளவுக்கு இஹ்வான்களின் அரசியல் வெற்றிகள் அமைந்துள்ளன.
இஹ்வான்களைப் பொருத்த வரை அவர்களுக்கு ஏற்படும் சோதனைகளாக இருந்தாலும், வெற்றிகளாக இருந்தாலும், எல்லாமே இறை நியதி என்ற நிலைப்பாட்டைக் கொண்டவர்கள். எனவேதான் அவர்கள் சலைக்காமல் ஜனநாயகத்துக்காக உழைத்துக்கொண்டிருக்கின்றார்கள்.
இஸ்ரேல் என்ற ஆக்கிரமிக்கப்பட்ட பலஸ்தீனைப் பொருத்தவரை அவர்கள் கடுமையான நிலைப்பாட்டைக் கொண்டிருக்கின்றனர். 1948க்கு முன்னர் உலக வரைபடத்தில் இல்லாத இஸ்ரேல் திட்டமிட்டு பலஸ்தீன நிலத்தில் உருவாக்கப்பட்ட ஒரு புற்று நோயைப் போன்றது, எனவே அதனை அகற்றி விட்டு பலஸ்தீன தனி இராச்சியத்தை கட்டியெழுப்புவதும் அவர்களது கனவாகும். இதற்காக முழு அளவில் அவர்கள் செயற்படுகிறார்கள்.
பிராந்திய ரீதியிலான அவர்களது வெற்றிக்கான காரணம், இஹ்வானிய இயக்கத்தைச் சார்ந்தவர்களே சுற்றியுள்ள நாடுளிலும் அரசியலில் முன்னனி வகிப்பதாகும். எனவேதான் அவர்களது இஸ்லாமிய சாம்ராஜ்யம் என்ற கனவு சாத்தியமாகும் இன்ஷா அல்லாஹ். அத்தோடு ஏனைய மதங்கள் மற்றும் இஸ்லாமிய இயக்கங்களுடனும் நல்லுரவினைப் பேனுகின்றனர்.
எனவே அவர்களது அடுத்த இலக்கு பிராந்தியத்தில் நாடுகளுக்கிடையில் இஸ்லாமிய கூட்டமைப் பொன்றினை ஏற்படுத்துவதாகும், அதன் மூலம் மடடுமே அந்நாட்டு மக்கள் உண்மையான ஜனநாயக காற்றை சுவாசிக்க முடியும் இன்ஷா அல்லாஹ்

No comments:

Post a Comment