Monday, June 27, 2011

விமர்சிக்கும் முன்...

Friday, 02 April 2010 06:46

        விமர்சனம் என்பது குறித்த விடயம் பற்றிய அபிப்பிராய வெளிப்பாடாகும். அதாவது குறித்த விடயம் தொடர்பில் அதில் உள்ள நிறை, குறை களை ஆராய்வதன் மூலம் சமாந்தரப்படுத்தும் அல்லது சீர்படுத்தும் கருவியே விமர் சனம் எனலாம்.

        ஆனால், இன்று அதன் அர்த்தம் மாற்றப்பட்டு விட் டது என்று சொல்லத் தோன்று கின்றது. ஏனெனில், விமர் சனத்திற்கு ஒரு நோக்கம் இருக்கின்றது. அதுதான் நிறை கள் நிறைய வேண்டும், குறைகள் குறைய வேண்டும் என் பதாகும். இது விமர்சகனிடம் இருக்க வேண்டிய ஒரு உணர் வுமாகும். ஆனால், இது இன் றைய விமர்சகர்களிடம் அற் றுப் போய்விட்டது. விதி விலக்கானவர்களைத் தவிர.

        விமர்சனம் என்றாலே குறைகளை குறைவுபடாமல் சொல்வது என்ற அர்த்தத் தில்தான் இன்று பிரயோகிக் கப்படுகிறது. விமர்சனம் எனும் போர்வையில் அடுத்த சகோதரன் இழிவுபடுத்தப் படுகிறான். ‘செயல்களிலே மிகக் கெட்ட செயல் சக முஸ்லிமை இழிவுபடுத்துவ தாகும்" (திர்மிதி)

        விமர்சனம் என்பது கருத் துக்களோடு தொடர்புடை யது. ஆனால், கருத்துக்களை கருத்துக்களாலன்றி வன் முறைகளால் எதிர்கொள் ளும் மனோபாவம் இன்று அதிகமாக வளர்ந்துவிட்டது.

        ஆக்கபூர்வமான விமர்ச னம் வரவேற்கத்தக்கது. நிறை, குறைகள் மிகைபடா மல் சிறந்த அணுகுமுறை, தூய நோக்கம் என்ற இரண்டு பண்புகளாலும் நெறிப்படுத் தப்படும் விமர்சனமே ஆக்க பூர்வமானதாகும். இவ்வகை யான விமர்சனங்களை திருப் தியோடு ஏற்றுக் கொள்ளும் மனோபக்குவம் விமர்சிக் கப்படுபவரிடம் இருக்க வேண்டும்.

        விமர்சிக்கும் முன் கோபம், பொறாமை, அறியாமை போன்ற பலவீனங்களின் ஆளுகையில் இருந்து பாது காப்பாக இருப்பது விமர்ச கனின் கடமையாகும். ஏனெ னில் கோபம் எல்லைமீறிய விமர்சனங்களைச் செய்யும். பொறாமையும் அறியாமை யும் குறைகளைச் சுற்றியே வட்டம் போடும், நிறைகளை குறைத்து மதிப்பிடும். அத் தோடு விமர்சிக்கப்படும் விடயம் குறித்து ஆழமான அறிவினை விமர்சகர் பெற்றி ருக்க வேண்டும். விமர்சிப் பதற்கு தகுதியானவராகவும் இருக்க வேண்டும். விமர்சிக் கும் முன் விமர்சனம் செய்து கொள்ள வேண்டும். ஏனெ னில், சுயத்தில் சுத்தமில்லா மல் அகத்தில் அசுத்தத்தோடு பிறரைச் சீர்படுத்த முனை வது அல்லாஹ்விடத்தில் வெறுப்பிலும் மிகப் பெரிய வெறுப்பாகும்.

        எனவே, விமர்சனத்தினை எல்லோராலும் செய்துவிட முடியாது. ஆனால், இது தவிர நஸீஹத் எனும் ஒரு விடயம் இருக்கிறது. இதற்கு தகுதி தேவையில்லை. எனவே, விமர்சனத்தினை குறைத்து நஸீஹத் எனும் நல்லுபதேசத் தினை செய்வோமாக.

2 comments: