Sunday, August 26, 2012

யா அல்லாஹ் என்னை மன்னிப்பாயாக..!

யா அல்லாஹ்
என்னை மன்னிப்பாயாக..!

உறக்கம் தந்தாய்
உறங்கிக் கொண்டே
இருக்கிறேன்.
தஹஜ்ஜத் பார்க்காமலே..
சிலவேளை,
பஜ்ரையும் காணாமலே
ஆனாலும்
என் உறக்கத்தை
மரணிக்க விடவில்லை - நீ
நீ அர்ரஹ்மான்!

யா அல்லாஹ்
என்னை மன்னிப்பாயாக..!
நல்லது தவிர
எல்லாம் பார்க்கிறேன்.
ஆனாலும்
என் கண்களின் ஒளி
இன்னும் வற்றவில்லை
நீ அர்ரஹ்மான்!

யா அல்லாஹ்
நீ என்னை மன்னிப்பாயாக!
தெரிந்து கொண்டே
நான் உனக்கு
மாறு செய்கிறேன்.
என் தேகமெல்லாம்
சுகமாயிருக்கிறது
ஒரு அணுவும் - நீ
குறைத்துவிடவில்லை
நீ அர்ரஹ்மான்!

பொய்கள் இறந்து விடும்
அந்நாளில்…
என் உடம்பெல்லாம்
உண்மை பேசும்..
தப்பிக்க எனக்கோர்
வழியும் இல்லை

யா அல்லாஹ்
அந்நாளில் - நான்
உன் முன்
வெட்கித் தலைகுனிய முன்
யா அல்லாஹ்...
நீ என்னை மன்னித்து விடு..
நீ அர்ரஹ்மான்!

நன்றி- தேடல்

No comments:

Post a Comment