Thursday, July 19, 2012

கல்குடா டுடே குறித்த சில விமர்சனங்கள்

கல்குடா டுடே  அரசியல், அடாவடித்தனம் , ஊழல் பற்றிய கல்குடா இணையச் சமூகத்தின் வலைமனை கடந்த பல வருடங்களுக்கு முன் பத்திரிகை வடிவில் வெளியிடப்பட்டது, பின்னர் வலைத்தளத்தில் எழுதப்பட்டுவருகின்றது. அரசியல் பின்னனி கொண்ட, படித்த சிலரால் இயக்கப்படும் இத்தளத்தில் அடுத்தவர்களின் அடாவடித்தனங்களும், மோசடிகளும், குறைபாடுகளும், தனிப்பட்ட குடும்ப விவகாரங்களும் பேசப்பட்டும் ஏசப்பட்டும் வருகின்றது.

பல நேரங்களில் அடாவடித்தனம் புரியும் அரசியல் வாதிகள், சமயத்தின் பெயரால் ஊடுருவியுள்ள வழிகெட்ட கூட்டங்கள், ஊழல் புரியும் அதிகாரிகள் பற்றிய உண்மை முகங்களை வெளிச்சத்திற்கு கொண்டுவந்த பெறுமை கல்குடா டுடேவினைச் சாரும், ஆனால் அவர்கள் எழுத்துக்கள் எப்பொழுதும் பண்பாடாக, இஸ்லாமிய வரையரைகளை பேணிய முறையில் அமைவது கிடையாது.

சில நேரங்களில் அடுத்த சகோதரனின் மானம் பகிரங்கப்படுத்தப்படுகிறது. தனிப்பட்ட, ஆனால் சம்பந்தம் இல்லாத பல விடயங்கள் ஆராயப்படுகிறது.
முஸ்லிம் சகோதரர்கள் ஒருவருக்கொருவர் பொறாமை கொள்ளக் கூடாது. ஒருவருக் கொருவர் போட்டியாக நடந்து கொள்ளக் கூடாது. ஒருவரை ஒருவர் புறக்கணிக்கக் கூடாது, கடினமாய்ப் பேசி மனதைப் புண்படுத்தக் கூடாது. யாரையும் தாழ்வாக எண்ணக் கூடாது. யாருக்கும் அநீதமிழைக்கக் கூடாது, யாரையும் இழிவுபடுத்தக் கூடாது என்றெல்லாம் இஸ்லாம் போதிக்க... இங்கு அடுத்தவர்கள் இழிவுபடுத்தப்படும் சங்கமாகவே கல்குடா டுடே இயங்குவதைக் கானலாம்
கல்குடா டுடே தேவையில்லை என்று நான் சொல்ல வில்லை அதன் வழிமுறை இஸ்லாமிய வரையரையை மீறியது என்று சொல்கிறேன்,

கல்வியறிவுள்ள, அரசியல் பிண்னனி கொண்ட ஒரு கூட்டம்தான் அதனை இயக்குகிறது என்றுதான் நினைத்துக்கொண்டிருந்தேன், ஆனால் அடிக்கடி அவர்களது சிறுபிள்ளைத்தனத்தையும் நிரூபித்துக்கொண்டே இருக்கின்றார்கள்.
நாம் அவர்களைப்பற்றி இப்படியல்லாம் பேசுவதனால் அவர்களது வழிமுறையில் எவ்வித மாற்றமும் ஏற்படப்போவதில்லை. எழுதும் போது பண்பாடாக, தனிப்பட்ட சம்பந்தப்படாத விவகாரங்களில் தலையிடாமல் உரிய விடயத்தை மட்டும் தோலுரிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன். வெறும் நக்கலான, கேலிக்கையான எழுத்தாக இருந்தால் அது சீரியஸ் தன்மையை இழந்துவிடும்.
ஈ.மெய்லில் வந்துசேரும் கட்டுரைகளே பெறும்பாலும் வெளியிடப்படுவதாக அறிகிறோம். e.mail வருகிறது என்பதற்காக வருகின்ற அனைத்து கட்டுரைகளையும் post பன்னுவது அறிவீனமானது. வன்முறையை துான்டக்கூடிய, பண்பாடற்ற கருத்துக்களை தனிக்கைப்படுத்தி பொறுத்தமான, அவசியமான கட்டுரைகளை மட்டும் வெளியிடுவதே சிறந்தது. ஆனால் இங்கு அரசியல், மார்க்க, மற்றும் தனிப்பட்ட பழிவாங்கள்களுக்கே கல்குடா டுடே பயண்படுத்தப்பட்டு வருவதை அதனை பார்கும் எவரும் புரிந்து கொள்வர்.
பக்கச்சார்பற்ற நடுநிலைத்தன்மை என்ற அவர்களது கொள்கை சிறந்ததுதான், ஆனால் அக்கொள்கையின் உள்ளார்ந்த அர்த்தமாக யாரைப்பற்றியதாக இருந்தாலும் எப்படியெல்லாம் எழுதப்பட்டு இருந்தாலும், எவ்வித விசாரிப்புகளும் இன்றி அது வெளியிடப்படுவதுதான் விசனத்துக்குறியது.
வெளியிடப்படும் தகவல்கள், செய்திகள் சரியோ, பிழையோ நான் அது பற்றி எதுவும் விமர்சனம் செய்யவில்லை.. ஆனால் எழுத்துக்கள் நாகரீகமானதாக, இஸ்லாமிய வரையரைக்குள் இருக்கின்றதா?? அப்படியில்லையென்றால் அல்லாஹ்விடத்தில் அத்தகைய செயற்பாடுகளுக்கு என்ன பெறுமானம் இருக்கப் போகின்றது. அல்லாஹ்தான் தீர்ப்பாளன், எத்தனையோ நபர்கள் கல்குடா டுடேயினால் இழிவுபடுத்தப்பட்டுள்ளனர். அவர்கள் பல வேலை பாவம் செய்திருந்தால் தவ்பா செய்து மீண்டபின் அவர்களை அல்லாஹ் மன்னிப்பான். ஆனால் இழிவு படுத்தியவர்களை பாதிக்கப்பட்டவர்கள் மன்னிக்கும் வரை அல்லாஹ் மன்னிக்க மாட்டான் என்று நபியவர்கள் கூறியுள்ளார்கள்.நான் தனிப்பட்ட ரீதியாக இவர்களால் பாதிக்கப்பட்டவன் அல்ல என்பதையும் இவ்விடத்தில் சொல்லிக் கொள்கிறேன்.
எனவே அதற்குப்பின்னால் இயங்கும் சமூகப்பற்றுள்ள(???) சகோதரர்களுக்கு அல்லாஹ் நேர்வழிகாட்ட இந்த ரமழானில் துஆ செய்வோம். நல்லதை நல்ல வழிமுறை மூலம் அடையும் பாக்கியம் எல்லோருக்கும் கிடைக்க அல்லாஹ் பறக்கத் செய்வானாக..

No comments:

Post a Comment