காதலர் தினத்தை ஒரு வணிக இலச்சினையாகவே நாம் கருத வேண்டும்
உலக நாடுகளில் இன்று காதலர் தினம் மிகவும் விமர்சையாக கொண்டாடப்படுகின்றது. காதலர் தினம் ஆரம்பிப்பதற்கு மகப் பேற்றை பெற்றுக் கொடுக்கும் ரோம சாம்ராஜ்யத்தின் காதல் கடவுள் என்ற ழைக்கப்படும் ஒரு வரின் ஞாபகார்த்த மாகவே இந்த காதலர் தினம் ஆரம்ப மாகியது. அங்கு அந்நாட்டு மக்கள் மகப் பேற்றை பெற்றுக் கொடுக் கும் இந்தக் கடவுளை வணங்கி வந்தார்கள்.
இன்றைய காதலர் தினத்தன்று ஆண் களும், பெண்களும் பரஸ்பரம் தாங்கள் விரும்புபவர்களுக்கு வாழ்த்து அட்டை களை அனுப்பி வைப் பார்கள் அல்லது சிறிய அன்பளிப்பு களை கொடுப்பார்கள், சற்று வசதியுடையவர் கள் சிறிய சொக்கலட் டுகளையும் அதைவிட சற்று வசதியுடையவர் கள் தங்கள் காதலி களுக்கும் காதலர் களுக்கும் விலை உயர்ந்த நகைகளையும் அன்பளிப்பு செய்வார்கள்.
காதலர் தினத்தன்று உலகில் விற்பனை செய்யும் சொக்லட்களுள் 75 சதவீதத்தை பெண்களே காசு கொடுத்து வாங்கி தங்கள் காதலர் களுக்கு அன்பளிப்பு செய்கிறார்கள். காதலர் தினத்தன்று உலகில் ஒரு பில்லியன் டொலருக்கும் கூடுதலான பெறுமதி வாய்ந்த சொக்லட் களை பெண்கள் வாங்குகிறார்கள் என்று அறிவிக் கப்படுகிறது.
1920ம் ஆண்டு தசாப்தத்தில் அமெ ரிக்கா வின் சிக்கா கோ, இலினொ ய்ஸ் ஆகிய நகரங் களில் காதலர் தினத்தில் அளவுக்கதிக மான மதுபோதையில் இருந்த ஆண்களினால் கோஷ்டி சண்டைகளும் ஏற்பட்டிருந்தது. இதனால் அன்றைய காலகட்டத்தில் அமெரிக்காவில் காதலர் தினத்தில் மது அருந்துவதற்கு முற்றாக தடை விதிக்கப்பட்டிருந்தது.
1929ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 14ம் திகதியன்று காதலர் தினத்தில் 7 பேரைக் கொண்ட ஒரு குண்டர் கோஷ்டி பொலிஸ் உடையணிந்து தங்களுக்கு எதிரான இன்னுமொரு குண்டர் கோஷ்டியைச் சேர்ந்த 7 பேரை சுட்டுக் கொன்றது. பொதுவாக பெப்ர வரி 14ம் திகதியன்று குருவிகளின் காதல் ஆரம்பமாகும் தினம் என்றும் ஒரு சம்பிரதாயம் குறிப்பிடுகின்றது.
உலகம் ஆரம்பமான போது ஆதாமுக்கும் ஏவாலுக்கும் இடையில் காதல் முதல் தடவையாக காதல் தோன்றியதாக வரலாற்று நூல்கள் சான்று பகர்கின்றன. இவர்களின் ரம்யமான காதல் வாழ்க்கையை சீர்குலைப்பதற்காக துஷ்ட தேவதைகள் ஒரு கனியை சாப்பிடுமாறு இவர்களுக்கு ஊக்கமளித்ததனால் உலகில் மனித குலம் இனவிருத்தியை எதிர்நோக்கி பல்வேறு துன்பங்களுக்கு இலக்கானதாகவும் கூறப்படுகின்றது.
சத்தியவான் சாவித்திரி, அம்பிகாவதி அமராவதி, லைலா மஜ்னு, சலீம் அனார்கலி, சாஜஹான் மும்தாஜ், ரோமியோ ஜூலியட் போன்ற உண்மைக்காதல் ஜோடிகளைப் பற்றி நாம் பட்டியல் போட்டுக் கொண்டே போகலாம்.
இவர்கள் உண்மையான மானசீக காதலர்கள். ஆனால் இன்று இன்றைய நவீன உலகில் தோன்றியிருக்கும் காதலர்கள் ஒருவனுக்கு ஒருத்தி என்ற கட்டமைப்பிற்குள் சேர்ந்தவர்கள் என்று கூற முடியாது. இவர்களை நாம் பொதுவான வார்த்தைகளில் வர்ணிப்பதாயின் மன்மதர்கள் என்றுதான் சொல்ல வேண்டும். இவர்களுக்கும் காதலுக்கும் வெகு தூரம். இந்த மன்மதர்கள் தங்கள் பணப்பலத்தையும் அரசியல் மற்றும் ஏனைய அதிகாரங்களையும் பயன்படுத்தி அபளைப் பெண்களின் வாழ்க்கையை சீர்குலைப்பதிலேயே மையமாகக் கொண்டு இயங்குகிறார்கள்.
இவர்களுக்கு காதலிகள் அவசியமில்லை. தங்கள் தேவைகளை பூர்த்தி செய்வதற்கு அவ்வப்போது ஒரு பெண்தான் தேவைப்படுகிறாள். எனவே, இன்றைய காதலர் தினத்தில் நம்நாட்டின் இளைஞர்களும், யுவதிகளும் உண்மையான காதல் என்ன என்பதை புரிந்து கொண்டு அதன்படி நடந்தால், தங்கள் வாழ்க்கை சீர்குலைவதை தவிர்த்துக் கொள்ள முடியும்.
காதலர் தினம் என்பது வெளிநாட் டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஒரு தீய பழக்கமாகும். வெளிநாட்ட வர்கள் காதலர் தினத்தை ஒரு வணிக இலட்சினையாகவே பயன்படுத்தி தங்கள் பொருட்களையும், விலை மதிப்பற்ற நகைகளையும், இலகுவில் விற்பனை செய்வதற்கு காதலர் தின த்தை பயன்படுத்தி பயனடைகிறார்கள்.
இந்த காதலர் தினம் உண்மையி லேயே ஒவ்வொரு நாட்டின் பண்டைய சம்பிரதாயங்களை சீர்குலைப்பதற்கு வழிவகுக்கின்றன. காதலர் தினத்தை ஒரு சாதாரண கொண்டாட்டமாக மாத்திரம் நாம் கடைப்பிடித்தால் அதனால் ஏற்படும் தீங்குகளை எங்கள் சமூகம் தவிர்த்துக் கொள்ளலாம்.
No comments:
Post a Comment