Sunday, April 29, 2012

அல்-இஹ்வானுல் முஸ்லிமூன் இயக்கம் ஓர் அறிமுகம். (பாகம் 02)

இஸ்லாமிய தூது பற்றிய இஹ்வான்களின் கண்ணோட்டம் (பாகம் 02)



இத்தகைய மனிதர்களுக்கு உண்மையான இஸ்;லாத்தோடு சேர்ந்து வாழ்வதற்கான சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. இஸ்லாத்தின் அடிப்படைகளைப்பற்றி இவர்களுக்கு எந்த அறிவும் இல்லை அல்லது இஸ்லாத்தை அதன் உண்மையான வடிவிலன்றி சோடிக்கப்பட்ட வடிவிலேயே அவர்கள் பார்க்கின்றனர். இஸ்லாத்தை மோசமாக நடைமுறைப்படுத்தும் மனிதர்களுடன் சேர்ந்து பழகியதன் விளைவே இது.
  இந்தக்கருத்துப்பின்னணியில் பார்க்கும் போது இஸ்லாம் பற்றி பல்வேறுபட்ட புரிதல்களுடன் முஸ்லிம்கள் வாழ்கின்றனர், அவர்களில் மிகச்சிலரே சரியாகவும் தெளிவாகவும் இஸ்லாத்தை விளங்கி அதனை செயற்படுத்த முனைகின்றனர் என்பது தெளிவாகின்றது.
  இஸ்லாத்தைப் பற்றியே முஸ்லிம்கள் மத்தியில் வித்தியாசமான புரிதல்கள் மிகத் தெளிவாகவே இருக்கும் நிலையில், இஹ்வான்களைப்பற்றி, அவர்களின் சிந்தனைகளைப்பற்றி பல்வேறுபட்ட பார்வைகள் சமூகத்தின் மத்தியில் நிலவும் என்பதில் எவ்வித சந்தேகமும் கிடையாது.
  இஹ்வானிய அமைப்பின் நோக்கம் மக்களுக்கு உபதேசங்களையும், நல்வழிகாட்டல்களையும் வழங்குவதாகும் என சிலர் நினைக்கின்றார்கள். இதன்; முழுமையான நோக்கம் உலகில் மறுமையை ஞாபகப்படுத்தி, உலகில் அதற்கான கட்டுச்சாதங்களை தயார் செய்து கொள்வதற்கான வழிகாட்டல்களை வழங்குவதாகும் எனவும் நினைக்கின்றனர்.
  வேறு சிலரோ இஹ்வான்களை ஸூபித்துவ இயக்கமாக நோக்குகின்றனர். இவர்கள் மக்களுக்கு திக்ருகள், இபாதத்கள், அவற்றோடு தொடர்பான துறவு, உலகப்பற்றற்ற நிலை போன்றவற்றை மக்களுக்கு போதிக்கின்ற இயக்கமாக விளங்கியுள்ளனர்.
  மற்றும் சிலர் இஹ்வான்களை பிக்ஹ் கிளைப்பிரச்சினைகளில் ஈடுபடும் பிரிவாக நோக்குகின்றனர். இவர்களின் நோக்கம் கருத்து வேறுபாடான விடயங்களில் வாதாடி, அதிலே அதிக மக்களை ஈடுபடுத்தி, அதன் விளைவாக மக்களிடத்தில் பிரச்சினைகளும் பிளவுகளும் ஏற்படுகின்றன எனவும் கருதுகின்றனர்.
  மிகச்சிலரே இஹ்வான்களோடு சேர்ந்து வாழ்ந்து அவர்களை விளங்கி வைத்துள்ளனர். வெறுமனே அவர்கள் செவிமடுத்ததோடு மாத்திரம் நின்று விடாமல்,தங்களுடைய கருத்தை இஹ்வான்களின் மீது திணிக்காமல் தெளிவாக அவர்கள் விளங்கினார்கள். இவர்கள் இஹ்வான்களின் உண்மை நிலையை தெளிவாக அறிந்து விளங்கியவர்கள். அவர்களின் ஒவ்வொரு தஃவா செயற்பாட்டையும் தெளிவாக விளங்கிக்கொண்டவர்கள்.
  இந்த கருத்து விளக்கங்களுக்கு மத்தியில் தான் இஹ்வான்கள் எவ்வாறு இஸ்லாத்தை விளங்கியிருக்கின்றார்கள் என்ற விடயத்தை உங்களுக்கு முன்னால் சுருக்கமாக விளக்க விரும்புகின்றேன்.
 (தொடரும் இஹ்வான் தமிழிலிருந்து)

No comments:

Post a Comment