Monday, April 23, 2012

தம்புள்ள விவகாரம் உணர்த்துவது என்ன?

(ஈ.எல்.எம்.இர்ஷாத்)

இலங்கையின் ஆதிக்குடிகளில் ஒன்றான முஸ்லிம்கள் காலாகாலமாக தேசப்பற்றுள்ளவர்களாகவும் பெறும்பான்மை இனத்தவருடன் சிறந்த நல்லுறவு கொண்டவர்களாகவும் வரலாற்றில் ஒரு போதுமே தனது தாய்நாட்டிற்கு துரோகம் இழைக்காதவர்களாகவும் வாழ்ந்து வருகின்றார்கள்.  அப்படியான ஒரு சிறந்த சமூகத்திற்கு பெறும்பாண்மையினர் இழைத்துவரும் கொடுமைகள் இலங்கை வரலாற்றில் புதிதல்ல.

ஒரு நாட்டில் வாழும் பெரும்பாண்மை சமூகம் சிறுபான்மை சமூகத்திற்கு தட்டிக்கொடுத்து ஒற்றுமையாக வாழும் போதே அந்நாடு அபிவிருத்தியை நோக்கிச் செல்லும். இதனைத்தான் மலேஷிய வரலாற்றில் பார்க்கின்றோம். மே புதுன்கே தேசய என்ற பௌத்தவாத கோசத்தினால் மூலைச்சலவை செய்யப்பட்ட சிங்கள இனவாதிகள் கடந்த காலங்களில் திட்டமிட்ட சதிவேளைகளில்  இயங்கிவருகின்றனர். இதற்கு முதல் பௌத்தர்களின் புனித புமியாக இல்லாத முஸ்லிம்கள் வசிக்கும் இடம் திடீரென எவ்வாரு புனித புமியாக மாற முடியும்.

அன்மையில் அனுராதபுரத்தில் சியாரம் உடைக்கப்பட்டதற்கும் தம்புள்ளை பள்ளிவாயல் உடைப்பு விவகாரத்திற்கும் இடையில் நெருங்கிய தொடர்புள்ளதாகவே தெரிகிறது. ஆனால் இவ்வாறான செயல்களுக்கு எதிராக எந்கவொரு பௌத்த விகாரைக் கெதிராகவும் முஸ்லிம்கள் செயற்பட போவதில்லை. பல முஸ்லிம் பகுதிகளில் உதாரணமாக மட்டக்களப்பு மாவட்டம் பிரைந்துரைச்சேனையில் எந்தவொரு சிங்கள பௌத்தரும் வாழாத முழுமையாக முஸ்லிம்களும் தமிழர்களும் சூழ வாழும் அப்பகுதியிலும்  இன்று வரை விகாரையொன்று மட்டும் இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது. ஆனால் மீண்டும் மீண்டும் ஏதோ ஒரு வகையில் முஸ்லிம்கள் இலக்கு வைக்கப்படுவதுதான் வேதனையளிக்கின்றது.

50 வருடங்களுக்கு மேல் பழமை வாய்ந்த குறித்த பள்ளிவாயில் சட்டவிரோத கட்டடமாக இருப்பின் அதனை சட்டப்படி அகற்றுவதற்கு வழிமுறை இருக்கின்றது. அசிங்கமான முறையில் சட்டம் ஒழுங்கை மீரிய இச்செயல் சட்டப்படி தண்டிக்கப்படவேண்டியது. காத்தான்குடியைச் சேர்ந்த ஒரு முஸ்லிம் ஆங்கிலேயர் ஒருவரிடம் வாங்கியதற்கான ஆதாரங்களும் உள்ளது.

எப்படியாயினும் முஸ்லிம் அரசியல் வாதிகளின் ஒற்றுமையில்தான் வெற்றி இருக்கின்றது. ஜம்மியதுல் உலமாவின் வழிகாட்டலின் கீழ் முஸ்லிம் அரசியல் தலைவர்கள் செயற்படுவார்களாயின் நிச்சயமாக எமக்கு சார்பான தீர்வொன்றினை பெற்றெடுக்க முடியும். அவ்வாறு ஒரு இணக்கம் வருமாயின் குறித்த பிரச்சினைய அல்லாஹ்வின் அருளாகவே அமையும். குறித்த இடத்திலேயே பள்ளியொன்றை கட்டும் தீர்மானத்தில் ஜம்மியதுல் உலமா இருக்க, அதனை அகற்றிவிட அதிகாரிகளுக்கு பிரதமர் உத்தரவிட்டுள்ளார். ஆனால் பள்ளிவாயிலையும் முஸ்லிம்களையும் பாதுகாக்க எதனையும் செய்வேன் பள்ளிவாயலை அகற்றும் விடயத்திற்கு என்னால் ஒரு போது இணங்க முடியாது என மாத்தளை மாவட்ட பாராளுமன்ற உருப்பினர் ஜனகபன்டார தென்னகோன் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறு இது தொடர்பில் சிங்கள அரசியல் தலைவர்களுக்கிடையிலும் மாறுபட்ட கருத்துக்கள் நிலவுகின்றது. ஆனால் இன்னும் இது தொடர்பில் ஜனாதிபதி கரிசனை காட்டியதாக தெரியவில்லை. ஒரு சிறுபாண்மை சமூகத்தை தாழ்தப் போய் சர்வதேசத்தில் தலைகுனிந்து வந்த அரசாங்கம் மீண்டும் அதே தவரை செய்யப் போகிறதா? என சில அரசியல்வாதிகள் கேள்வியெழுப்புகின்றனர். இவ்விடயம் தீர்வுகானப்படாமல் இழுத்தடிக்கப்படுமானால் கண்டிப்பாக சர்வதேச சமூகத்திற்கு பதில்சொல்ல வேண்டிய இக்கட்டான நிலைமைக்குள் மீண்டும் உள்ளாக நேரிடும்.

முஸ்லிம் நாடுகள் இலங்கையில் உள்ள தங்களது துாதரகங்களுடன் தொடர்பு கொண்டு பள்ளிவாயல் உடைப்பு விவகாரம் பற்றிய தகவல்களைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. எதுஎவ்வாறாயினும் முஸ்லிம்களுக்கு எதிரான தீர்வுகள் எடுக்கப்படும் பட்சத்தில் அரசாங்கத்திற்கு எதிரான முடிவுகளை முஸ்லிம்கள் எடுக்க நேரிடலாம். எனவே முஸ்லிம்களது மத உரிமை தொடர்பில் சட்டரீதியில் பாதுகாப்பு வழங்க வேண்டிய கடமை அரசாங்கத்திற்கு உள்ளது.

1 comment:

  1. International justice(shareeah) party
    7 minutes ago
    dear muslims assalamu laikum wr wb.plz b aware of munafiq ,opportunistic poiticians.they only create racism among us.--desa paaluwo--dnt be sided either wth blue or green parties.depend on allah swt.lets create true silamic politicns in pesnal n politcl lives accordng to proptic way.feesabilillah-allahu akbar

    ReplyDelete