Saturday, May 5, 2012

கிழக்கு மாகாண மக்கள் எதிர்நோக்கும் காணிப்பிரச்சினைகளுக்கான விசாரனைகள்

கிழக்கு மாகாண பொது மக்கள் எதிர்நோக்கும் காணிப் பிரச்சினைகளை விசாரனை செய்து, அவற்றுக்கான ஒழுங்கு முறையான தீர்வுகளைக்காணும் பொருட்டு மாவட்டந்தோறும் (கிழக்கில்) விசானைக்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண காணி ஆனையாளர் டிடி.அனுரதர்மதாச தெரிவித்ததாக தினசரிப் பத்திரிகைகளில் செய்திகள் வெளியாகியுள்ளன.
(ஆதாரம் தினக்குரல் 26-04-2012, தினகரன் 27-04-2012)

அம்பாறை மாவட்டம்
இதன்படி அம்பாறை மாவட்டத்தில் அமைக்கப்பட்ட குழு தனது செயற்பாட்டை ஆரம்பித்துள்ளது. ஆகவே அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த தனி நபர்கள், குழுக்கள் மற்றும் அமைப்புக்கள் தாம் அரச காணிகள் தொடர்பாக எதிர்நோக்கும் பிரச்சினைகளை எதிர்வரும் மே மாதம் 15ஆம் திகதிக்கு முன்னர் ஜனாப் கே.எல்.எம்.முஸம்மில் செயலாளர் "அம்பாறை மாவட்ட காணிப்பிரச்சினைகள் குழு” மாவட்ட அரசாங்க காரயாலயம், அம்பாறை என்னும் முகவரிக்கு அனுப்பிவைக்குமாறு காணி ஆனையாளர்  கேட்டுள்ளார்.

மட்டக்களப்பு, திருகோணமலை மாவட்டங்கள்

மாகாணக் காணி ஆணையாளரால் மேற்படி மாவட்டஙகளில் அமைக்கப்பட்ட விசாரணைக் குழுக்கள் பற்றிய விபரங்கள் இன்னும் வெளிவரவில்லை. சம்பந்தப்பட்ட மாவட்டத்திலுள்ள காணிப்பிரச்சினைக்குள்ளான பொதுமக்கள் மேற்படி மாவட்டங்களின் மாவட்ட அரசாங்க அதிபர் காரியாலயங்களுடன் அல்லது மாகாணக் காணி ஆணையாளருடன் முறைப்பாடுகளை அனுப்பிவைக்குமாறு வேண்டப்படுகின்றனர்.

கற்றுக்கொண்ட பாடங்களுக்கான நல்லிணக்க ஆணைக்குழு (LLRC) வின் சிபார்சுகள்

நடந்தேறிய வன்செயலின் போது காணி இழந்த முஸ்லிம்களின் விபரங்கள் கிழக்கு முஸ்லிம் சமாதான பேரவையிடமிருந்து பெறப்பட்டுள்ளன. அவற்றின் விபரமாவது
விஸ்தீரணம்
                         ஏக்கர்     றுாட்    பேச்சஸ் 
  1. அம்பாறை மாவட்டம்       16,764     01         14
  2. மட்டக்களப்பு மாவட்டம்     28,813     00         33
  3. திருகோணமலை மாவட்டம் 17092     02          26           
                  மொத்தம்      62,670               33
    மேற்படி காணி சம்பந்தமாக கிழக்கு முஸ்லிம் சமாதானப் பேரவையின் தலைவர், கற்றுக் கொண்ட பாடங்களுக்கான நல்லினக்க ஆணைக்குழுவிடம் செய்த முறைப்பாடு ஏற்பட்டு, இவ் ஆணைக்குழுவின் பரிந்துறைகளில் அவை, அத்தியாயம் 09, பந்தி 09. 144, பந்தி,09.148 ஆகியவற்றில் இடம் பெற்றுள்ளன. அதன்படி காணி இழந்த முஸ்லிம்கள் தமது இழந்த காணிகளை மீளப்பெறவும் அவற்றிக்கான உரிமைப் பத்திரங்களையும் பெற்றுக் கொள்ளவும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளன.

    ஆகவே மேற்படி 03 மாவட்டங்களிலும் வன்செயலில் காணி இழந்த முஸ்லிம், தமிழ் மக்கள் தமது காணிகளை மீளப்பெற சம்பந்தப்பட்ட விசாரனைக் குழுக்களிடம் முறைப்பாடு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.


    No comments:

    Post a Comment