Thursday, June 21, 2012

காலங்களில் கரைதல்....

காலங்கள் கரைந்து போனாலும்...
காத்திருப்புக்கள் வெறுத்துப் போனாலும்...
கடைசியில் அல்சர்தான் மிஞ்சினாலும்...
நம்பிக்கையான எதிர்பார்ப்பு மட்டுமே இறுதியாக...

சில வேலை
அர்த்தமற்ற விருப்புகளுக்கும்
நன்பர்களின் துஆக்களுக்குமிடையில்
சமநிலையற்று...
பிரிகோடுகள் பல
இருப்பதான மனப்பிராந்தி...

எனக்கென்று என் செல்போனைத்தவிர
எந்த சொத்துக்களும் கிடையாது...

எனக்கென்று என் நன்பனின் நஸீஹத்தை தவிர
எந்த புகழும் கிடையாது...

சிலவேலை
என் பேனா மனைவியாக மாறிவிடுகிறது
பேனாவைத் திறப்பது
என் மனதைத் திறப்பதைப் போல

சில வேலை
காகிதங்கள்கூட அமிழ்ந்துவிடும்
விழிநீர்ப் பிரளயத்தில்...

பல வேலை
இறவுகளை வசப்படுத்த முடியாமல் போய்விடுகிறது
இருளின் கறுமையிலும் அதன் வெறுமையை
மறந்தவனாய்...
உணவுகளிலும் விசுவாசமற்றுப்போய்...

என்றாலும் நாளை சீக்கிரம் உதயமாகும் என்ற நம்பிககையுடன்
கண்கள் துாக்கங்களைத் தழுவுகின்றன..
(ஈ.எல்.எம்.இர்ஷாத்)

No comments:

Post a Comment