Thursday, July 26, 2012

புதுவெளியைப் பார்த்துவிட்டு...

அஷ்ரப் சிஹாப்தீன்
உங்களது வலைப்பூ “புதுவெளி“ பார்த்தேன். இப்போதுதான் ஆரம்பம் என்பது தெரிகிறது. இனைந்தோர் என்று இருக்கிறது. அது “இணைந்தோர்” என்று வரவேண்டும். அதாவது “ன“வுக்குப் பதில் “ண“ வரவேண்டும். “தரிசித்தோர்கள்“ என்றிருக்கிறது. “தரிசித்தோர்“ என்றாலே பன்மைதான். “கள்“ அவசியமில்லை. “இணைப்புகள்” என்ற சொல்லில் “இனணப்புகள்“ என்றுள்ளது. திருத்திக் கொள்ளுங்கள். நிறைய வாசியுங்கள். வாழ்த்துக்கள்!

 முஹம்மத் றிழா
இர்சாத்திற்குஓயாதா வாசிப்பு கை எழுத்தை அழகு படுத்தும். அனுபவம் எழுத்துக்கு உரம் சேர்க்கும்.தங்களது முயற்சிக்கு வாழ்த்துக்கள்



இலங்கைநெற் இணையம்
எவ்வளவு காலமாக செய்கின்றீர்கள் இலங்கைநெற்றுக்காக எழுத முடியுமா? முயற்சி திருவினையாகும் என்பார்கள் முயற்சியுங்கள் முட்டுக்கொடுக்க நாம் தயாராவுள்ளோம்.

அன்ஸார் சப்ரான்
''allah will help on your every movements, i thing it will be a PERFECT website to islamic so surely allah will help for you''

ஸபீர் ஹாபிஸ்
அன்புமிகு இர்ஷாத்,
அஸ்ஸ‍லாமு அலைக்கும்.
வலைப்பூவில் உங்களைத் தரிசிப்ப‍தில் சந்தோஷம். வாசிப்பு எல்லோரும் செய்து விடக் கூடியது. எழுத்து என்பது நேர்மை உள்ளோர் மட்டுமே செய்ய‍ வேண்டியது.
உங்களது எழுத்து முயற்சிகளுக்கு எனது வாழ்த்துக்க‍ள்.
முயன்றால் உங்கள் வலைப்பூவை மேலும் அழகுபடுத்த‍லாம். தற்போது எண்ண‍ற்ற‍ தமிழ் வலைப்பூக்க‍ளும் இணையத்த‍ளங்களும் இணைய உலகில் பரந்து செறிந்துள்ள‍ன. இலக்கிய தாகமுள்ளோருக்கு உள்ள‍ங்குளிரவும் ஆன்மா நிறையவும் அவை அள்ளி வழங்குகின்றன. எல்லோரும் நன்றாக இருக்க‍ வேண்டும் என்ற நல்லெண்ண‍ம் நாம் நன்றாக வாழ்வதற்கு அவசியமானது.
இலக்கிய முயற்சிகளின் நோக்க‍ம், அறத்தையும் மொழியையும் வாழவைப்ப‍தாகும். அதை நீங்கள் செய்ய‍ முயன்றால் உங்களது முயற்சிகளுக்கு ஈருலகிலும் நன்மை கிட்டும்.
நேசத்துக்குறிய வலைத்த‍ளங்கள் என தலைப்பொன்று இட்டுள்ளீர்கள். நேசத்துக்குரிய என்றுதான் வரவேண்டும்.
வாழ்த்துக்க‍ள்.

No comments:

Post a Comment