Monday, July 30, 2012

தொட்டுவிடும் துாரத்தில்....

 தோப்புரைச் சேர்ந்த எனது நன்பர் எம்.எம்.ஷாபி கடந்த 6 வருடங்களுக்கு முன்னர் எனக்காக எழுதியனுப்பிய கவிதை இது, அக்காலப்பகுதியில் நாங்கள் கடிதம் மூலமே தொடர்புகளை வைத்துக் கொள்வோம், அதன் பின்னர் கடிதம் SMS ஆக மாறிவிட்டது, இனி அவர் எனக்காக அன்பாக எழுதிய கவிதையினை பகிர்ந்து கொள்கிறேன்



தொட்டுவிடும் துாரத்தில்
வாழ்கையிருக்கு...
அதை பெற்றுவிட தயக்கம் - இன்னுமெதற்கு
கற்றுவிட நிறைய
மீதமிருக்கு...

கற்பனையில் வாழ்தல்
சுத்தக்கிறுக்கு...
அற்புதங்கள் நிறைய
மிச்சமிருக்கு...
அத்தனையும் தெரிந்தால்
அச்சமெதற்கு...

புத்தகங்கள் நிறைய மூடிக்கிடக்கு...
புத்திமதி அதற்குள் கொட்டிக்கிடக்கு...
சின்னஞ்சிறு உழிதான்
சிற்பம் செதுக்கு...
சித்திரத்துக்குள்ளும் பல நுட்பமிருக்கு...

கொட்டிவிடும் இலைகள்
கோடை வெளிலியில் - பின்னர்
பட்டயிலும் பசுமை
மாரி மழையில்...
எட்டிவிட முடியாமல்
என்ன இருக்கு
எச்சில் வலைதானே
சிலந்தி பிண்ணியிருக்கு...
எட்டிவைக்கும் போதுகளில்
பாதம் சறுக்கும்...

ஏற்றம் உள்ள பாதைகளில்
பள்ளம் இருக்கு...
வெற்றி பெறும் மனது
வேண்டியிருக்கு...
தோல்விகளில் கூட
பல பாடமிருக்கு ...

No comments:

Post a Comment