Saturday, August 18, 2012

ஸதாகா சேரும் நானும்

எனது அன்பு ஆசிரியர் ஏ.ஜி.எம்.ஸதகா அவர்களைப் பற்றி நினைக்கும் ஒவ்வொரு நொடியும் ஒரு சொட்டுக் கண்ணீராவது விடாமல் இருக்க முடியவில்லை. நான் ஒரு மாணவன் என்பதையும் தாண்டி அவர் என் மீது வைத்திருந்த நம்பிக்கை, அன்பு இஸ்லாமிய கொள்கை ரீதியானது.

மீள்பார்வை வெளியீடுகளை பாடசாலைக்காலங்கள் தொடக்கம் அவரது அந்திம காலம் வரை அவருக்கு தவராமல் கொடுத்து வந்தேன். சாதாரன தரப் பரீட்சை எழுதிவிட்டு குடும்ப கஷ்ட நிலை காரணமாக அவரது கடையிலே சில மாதங்கள் வேலை செய்தேன்.

அந்திம காலங்களில்... சந்திக்கும் அனேக சந்தர்ப்பங்களில் இஸ்ரா கல்வி கலாசார நிலையத்தில் பகுதி நேர ஹிப்ழ் வகுப்பு செய்தால் சிறப்பாக இருக்கும் என்று ஆலோசனை கூறிக்கொண்டே இருப்பார். மீள்பார்வைக்கு தான் எழுதிய கட்டுரை ஒன்று பிரசுரமாகவில்லை என்று என்னிடம் அடிக்கடி சொல்வார். நான் சொல்வேண் மெயில் பன்னியதால சில நேரம் பார்கப்படாமல் விடப்பட்டிருக்கலாம். பிரின்ட் எடுத்துத் தாங்க நான் போகும் சந்தர்ப்பங்களில் கொடுக்கிறேன் என்று கூறுவேண். கடைசிவரை அது என்னால் செய்யப்படாமலே போய்விட்டது.

பாடசாலைக்காலங்களில் மாணவர்களது ஒழுக்க மேம்பாடு தொடர்பில் அதிக கரிசனை காட்டினார். நபி ஸல் அவர்களது மரணத்தை உமர் ரழி ஏற்க மறுத்ததைப் போல ஸதகா சேரின் மரணமும் ஏற்க முடியா நிதர்சணமாகவே உள்ளது....

No comments:

Post a Comment