Monday, September 17, 2012

அரபு வசந்தமும் இஸ்லாமிய எழுச்சியும்

அன்மைக்காலமாக அரபு நாடுகளில் வெடித்துக் கொண்டிருக்கும் மக்கள் எழுச்சிப் போராட்டங்கள் கொடுங்கோலும், சர்வதிகாரமும் ஆட்கொண்டிருந்த அதிகார பீடங்களை நோக்கி மக்களை வெகுன்டெழச் செய்து கொண்டிருக்கின்றது.  இப்புரட்சியும் அதற்குப் பின்னரான இஸ்லாமி எழுச்சியும் பல்வேறு தரப்பினராலும் பலவிதமாக புரியப்பட்டும் பேசப்பட்டும் வருகின்றன. உண்மையில் இப்புரட்சி திடீரென தோன்றியதாக இருந்தாலும் நீண்ட வேதனைகளுக்குப் பின்னரான பிரசவமாகவே இது அமைந்துள்ளது.  முஸ்லிம் பெயர்களைத் தாங்கிய இஸ்லாம் விரோத ஆட்சியாளர்களின் அடக்கு முறைகளுக்குள் அள்ளள்பட்டுக் கொண்டிருந்த குறிப்பாக இஸ்லாமியவாதிகளும் பொதுமக்களும் நீதிக்காகவும் சுதந்திரத்திற்காகவும் நீண்டகாலமாகவே காத்துக் கொண்டிருந்தனர்.     துாக்கியெரியப்பட்ட பின் அலி, முபாரக், கடாபி போன்றோர்களது ஆட்சியில் இஸ்லாமியவாதிகள் பட்ட துன்பன் சொல்லில் அடங்காதவை. நாடுகடத்தப்பட்டும், துாக்கிலிடப்பட்டும் சிறைப்படுத்தப்பட்டும் இன்னோரன்ன கொடுமைகளுக்கு உள்ளாக்கப்பட்டனர். எனவே இப்படியான கொடுங்கோலர்களை நோக்கித்தான் மக்கள் சீறிப்பாயந்து கொண்டிருக்கின்றனர்.     அத்தோடு அரபுவசந்தம் என அழைக்கப்படும் இப்புரட்சி பற்றி மிகத்தெளிவாக புரிந்து கொள்ளப்பட வேண்டிய இன்னுமொறு விடயம் இது இறை நியதிஎன்பதாகும். நபி (ஸல்) அவர்களது பல முன்னறிவிப்புக்களின் படி இறுதிக்காலத்தில் நுபுவத்துடைய ஆட்சி வரும் என்பது தெளிவானது. இந்த அடிப்படையில் 1924 ஆம் ஆண்டிலிருந்து தலைமைத்துவம் அற்றிருந்த உலகலாவிய முஸ்லிம் சமூகம் மீண்டுமொரு கிலாபத்திற்காக தயாராகி வருவதனை இப்புரட்சியின் பின்னரான இஸ்லாமி எழுச்சி எடுத்துக்காட்டுகின்றது.    உலகலாவிய ரீதியில் நோக்கினால் அமெரிக்கா, பிரித்தானியா போன்ற மேலைத்தேய நாடுகளில் முதலாளித்துவத்திற்கு எதிரான Wall street போராட்டம் முனைப்புப் பெற்றுள்ளது. அக் கொள்கையின் பலயீனத்தையும் சுயநலப் போக்கையும் மக்கள் உணரத் தொடங்கியுள்ளனர். வெறுமனே பொருளாதார மாற்றம் மட்டுமன்றி சமூக, அரசியல் ரீதியிலும் மாற்றம் ஏற்பட வேண்டும் என்பதே ஆர்ப்பாட்டக்காரர்களின் எதிர்பார்பாக இருந்தது. அதே போன்று தொழில்நுட்பத்தில் வளர்சியடைந்த ஜப்பான் போன்ற நாடுகள் இயற்கையின் சீற்றங்களினால் பாதிப்படைந்துள்ளன. இறை சக்தி மிஞ்சி எந்தவொரு சக்தியினாலும் முடியாது என்பதனை அந்நாடுகள் உணர தொடங்கியுள்ளன. மேற்கு நாடுகளில் இஸ்லாத்தை தழுவுகின்ற வீதமும் அதிகரித்துள்ளது. அன்மையில் மேற்கு ஊடகம் ஒன்று வெளியிட்ட தகவளின்படி அமெரிக்காவில் வருடத்திற்கு 20000 நபர்கள் இஸ்லாத்தை தழுவுகின்றனர் அதில் 75 வீதமானோர் பெண்களாவர்.    இப்படியான ஒரு காலகட்டத்தில்தான் இஸ்லாம் மீண்டும் எழுச்சியடைகிறது. துானிஷியாவின்பு அஸீஸிஎன்ற இழைஞனின் தற்கொலை ஆரம்பமாக இருந்தாலும் வேதனைப்பட்டு வந்த மக்களின் சினமும் அதற்குள்ளால் இருந்த சகோதரத்துவ கட்டுமானமும் புரட்சித்தீயை அனையவிடாமல் கொண்டுசென்றது. துானிஷியாவில் தொடங்கி  சிரியா வரை மக்கள் எதிர்ப்பு போராட்டம் வரை தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.  எனவே இது அல்லாஹ்வுடைய ஏற்பாடு என்ற உயர்ந்த நோக்கில் பார்கப்பட வேண்டியது. இன்று மத்திய கிழக்கில் ஏற்பட்டிருக்கும் புரட்சிகள் சமூகத்தின் சமூகத்தின் அனைத்துக் கூறுகளிலும் மாற்றங்களை ஏற்படுத்தும் தன்மை கொண்டது. எடுத்துக்காட்டாக அதிகமான எழுத்தறிவு வீதம் கொண்ட நாடுகளாக அரபு நாடுகள் மாறிவருகின்றன. அத்தோடு இப்புரட்சிகள் மத்திய கிழக்கு பிராந்தியம் மட்டுமன்றி உலகம் தழுவிய அரசியல் ஒழுங்கமைப் பொன்றிற்கு இட்டுச் செல்லக்கூடும்.     உலகின் மிகப் பெரிய இஸ்லாமிய இயக்கமான அல் இஹ்வானுல் முஸ்லிமீன் இவ்விடத்தில் குறிப்பிட்ச் சொல்லப்பட வேண்டியது. நடைபெற்று முடிந்த எகிப்திய புரட்சிகளுக்குப் பின்னால் அதனை ஒழுங்குபடுத்தி வெற்றியடையச் செய்தமை மட்டுமல்லாமல் முபாரக்கின் பின்னரான எகிப்திலும், பின் அலிக்குப் பின்னரான துனிஷியாவிலும், மொரோக்கோவிலும் நடைபெற்ற தேர்தல்களில் வெற்றியடைந்து முன்னனியில் உள்ளனர். இஹ்வான்களைப் பொருத்தவரை உலகம் தழுவிய நிகழ்சி நிரலைக் கொண்டிருக்கிறார்கள். இஸ்லாம் என்பது சம்புரண வாழ்கைத்திட்டம் என்றும் அரசியல் என்பது இஸ்லாத்தில் ஒரு பகுதி என்ற கருத்தினைக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அவர்கள் ஆட்சி செலுத்துவதை விட அரசியலில் பங்களிப்புச் செய்யவே விருப்புகிறார்கள். இஸ்லாமிய சட்ட அமுலாக்கமே அவர்களது நகர்வின் இலக்காக உள்ளது. இதற்காகவேண்டி இஸ்லாமிய அடிப்படையில் சில தந்திரோபாயங்களையும் செய்கின்றனர்.  இதனைப்புரிந்து கொள்ளாத சிலர் இஸ்லாம் ஒன்றே தீர்வுஎன்ற அவர்களது கொள்கையில் இருந்து விலகிவிட்டதாக விமர்சனம் செய்கின்றனர். உண்மையில் இஸ்லாம் என்பது இஹ்வான்களின் உயிரில் கலந்த ஒன்றாக மாறிவிட்டது. இதனால்தான் அவர்கள் துாக்கிலிட்டுக் கொள்ளப்பட்டார்கள், நாடுகடத்தப்பட்டார்கள்.    எனவேதான் சில இஸ்லாமிய அறிஞர்களது கருத்துப்படி இமாம் ஹஸனுல் பன்னா, செய்யித்குத்ப், மௌலானா மௌதுாதி இவர்களது சிந்தனை இருந்திருக்கவில்லை யென்றால் அரபு வசந்தமும் இல்லை என்கின்றனர். ஆனாலும் இஹ்வான்களோ அல்லது வேறு குழுக்களோ இவ் எழுச்சிகளுக்கு தனியுரிமை கோர முடியாது. ஷீஆக்களைத் தவிர பல்வேறுபட்ட மக்களும், குழுக்களும் இதற்காக பாடுபடுகின்றனர்.   வெறுமனே ஊடகங்களில் வெளியாகும் பக்கச்சார்பான செய்திகளை பார்த்துவிட்டு இஸ்லாமிய வாதிகளையும் அரபு வசந்தத்தையும் எடைபோடுவது அறியாமையாகும்.  எனவே இஸ்லாமிய வரலாற்றையும் நபி (ஸல்) அவர்களது முன்னறிவிப்புக்களையும் ஆராய்கின்ற போது கொடுங்கோலின் வீழ்சியும், இஸ்லாமி எழுச்சியும் இறை நாட்டம் என்பதையும் அங்குள்ள இஸ்லாமிய வாதிகளின் முன்னேற்றம் மக்கள் அவர்களுக்கு வழங்கிய அங்கீகாரம் என்பதையும் அவர்கள் இறை சட்ட த்தின் ஆட்சிக்காய் தயாராகின்றார்கள் என்ற யதார்தத்தையும் புரிந்து கொள்ளவோம்.

No comments:

Post a Comment