Friday, November 28, 2014

சுயநலங்கள் சுக்கு நுாறாகிப் போகட்டும்

-ஓடையூர் பாதுஷா-

ஈமானில்லா
ஈனப் பிறவிகளா நீங்கள்
இன்னுமேன் தயங்குகிறீர்கள்
தன் மானங்ககாக்க
துணிவில்லா உங்களுக்கு
தலைவர் பதவி என்ன இழவுக்கு...

துணிந்தவனுக்கு துாக்கு மேடை துாசு
மாற்றான் படைகண்டு
பயந்து நடுங்கினால்
தோற்றான் தலைவனென்று
மார் தட்டி மகிழ்வர்
மடையர் கூட்டம்.




விலாங்கு போல
வீனாய் ஏன் நெளிகிறீர்கள்
எம்.பி பதவி கவசத்தை
நெஞ்சில் சுமந்து கொண்டு
தம்பிகளே தடை தாண்டுங்கள்
ஊழல் மலையெல்லாம்
ஊதித்தள்ளுங்கள்
உயர்வு பெறுவீர்கள்

ஏமாற்றிய காலமும்
ஏமாறிய காலமும்
மலையேறி
பல நாளாச்சு
உரைக்கின்ற
உண்மைக்கு மட்டும்
உறைவிடம் இங்குண்டு

குறைக்கின்ற
நாய்களுக்கு
கல்லடிக்கும் துணிவுமுண்டு
பொல்லடிக்குப் பயந்து
சொல்லடி இங்கே
குறையாது.

சால்லையைக் கண்டு
போர்வையைக் கழட்டும்
அடிமைத்தனம் இனியும் நடக்காது
முஸ்லிம்களின் உணர்வுகளை
இனியும் அடக்கி ஆழ இயலாது

புறமுதுகு காட்டாமல் புறப்படுங்கள்
புதுயுகம் பிறக்கட்டும்
ஏழைகளாய் வாழலாம்
கோழைகளாய் வாழ அனுமதிக்கவில்லை
இஸ்லாம்.

தன்வாசிக்காய் தலையாட்டும்
தரங் கெட்ட அரசியலை
தன்மானமுள்ள எவனும்
அனுமதிக்க மாட்டான்

மக்களுக்காகத்தான் கட்சி
கட்சிக்காக மக்களில்லை
என்றுணரும் காலமிது.

காலங்கடந்து ஞானம் பிறந்து பயனில்லை
காற்றுள்ளபோதே துாற்றிக்கொள்ள
துனிவோடு முடிவெடுங்கள்
வெற்றிக் கம்பத்தை நோக்கி
வீறுநடை போடுங்கள்
காலமும் நேரமும்
விறைவாய் போகிறது
அதை விரயமாக்காமல்
நெஞ்சு நிமிர்த்தி
நேர் செல்லுங்கள்

சுயநலங்கள் சுக்கு நுாறாகிப் போகட்டும்

கூடிப் பேசி முடிவெடுக்க
நாடி பிடித்து சோதிடம் சொல்ல
இனியும் உங்களால் முடியாது
காலங்கடத்தாமல்
காரியத்தில் இறங்குங்கள்

கடமை காத்துக் கிடக்கிறது
சந்தர்ப்பம் சந்தி நின்று கூவுகிறது
மூலைக்குள் முடங்கிக் கிடக்க
முக்காடு போட்டவர்களல்ல நீங்கள்

No comments:

Post a Comment