இஸ்ரேல் அசத்தியத்தின் மீதெழுந்த செல்லுபடியற்ற ஒரு படைப்பு என்று கலாநிதி யூசுஃப் அல் கர்ளாவி தெரிவித்துள்ளார். இஸ்ரேல் அநீதியின் மீதெழுந்துள்ளது. காலம் எவ்வளவு நீண்டாலும் அது இல்லாமல் போவது நிச்சயம் என்பதை அனைத்து மதங்களும் குறிப்பிடுவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
கட்டாரின் உமர் இப்னு கத்தாப் பள்ளியில் இடம்பெற்ற குத்பாப் பிரசங்கத்திலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இஸ்ரேலின் முடிவு அண்மித்திருக்க வேண்டும்.
இந்த அநியாயம் மிக விரைவில் நீங்கிட வேண்டும் என நான் எதிர்பார்க்கிறேன். முஸ்லிம்களே! எழுந்திருக்கும் இந்த அநியாயம் நிலைத்திருக்கப் போவதில்லை. மிக்க் கடுமையானவனான அல்லாஹ் தஆலா அவர்களைத் தணடிப்பான் என்பதில் உறுதியான நம்பிக்கை வையுங்கள் எனவும் அவா அதில் வேண்டிக் கொண்டார்.

No comments:
Post a Comment