Monday, December 3, 2012

பாதையின் இடையே...(பகுதி-2)

 தஃவாப் பாதையில் மூவகையினர்

(பகுதி-02)
தஃவாப் பாதையென்பது மேடுகளும் பள்ளங்களும், கற்களும் முற்களும் நிறைந்த ஒரு நீண்ட பாதை.

அப் பாதையில் செல்வதற்கு பலர் முன் வரலாம் ஆனால் அதில் பயணித்த ஆரம்பத்திலேயே அதன் கஷ்டங்களை உணர்ந்த பலர் தொடர்ந்து செல்ல மறுத்துவிடுவர்.

இன்னும் சிலர் சற்று துாரம் சென்றுவிட்டு சுமக்க முடியா சுமைகளை இறக்கிவைத்துவிட்டு திரும்பிவந்துவிடுவர்.

இன்னும் சிலரோ எதையுமே பொருட்படுத்தாமல் எடுத்துவைத்த காலை பின் வைக்காமல் தொடர்ந்து நம்பிக்கையோடு பயணிப்பர்.

இவர்கள் வெகு சிலராகவே இருப்பர். இவர்ளைப் பற்றித்தான் அல்லாஹ்  அவர்களது உயிர்ளையும் உடமைகளையும் சுவர்கத்தைத் தருவதாக கூறி வாங்கியதாக கூறுகிறான்.

செய்யித் குத்ப் சொல்வதைப் போல பிறப்பில் தொடங்கி மரணத்தையும் தாண்டி மறுமை வரையும் நீள்கின்ற வாழ்வு இத்தகையவர்களுடைதுதான்.

No comments:

Post a Comment