Sunday, December 16, 2012

பாதையின் இடையே...

துஆ அங்கீகரிக்கப்படக்கூடிய மனிதர்களை உருவாக்குதல் 



ஈமானிய அமர்வு ஒன்றின் போது எமது உஸ்தாத்  ஒரு சம்பவத்தைச் சொல்லிக்காட் டினார்.
தப்லீக் ஜமாத்தின் சர்வதேச அமீரைச் சந்திப்பதற்காக ஒரு குழு  சென்றுள்ளது.
அமீரைச் சந்தித்து தங்கள் ஜமாத்தின் அடைவுகள் குறித்த தகவல்களை முன்வைத்துள்ளனர்.
3 நாள் முடித்தவர்கள், 10 நாள் முடித்தவர்கள், 40 நாள் முடித்தவர்கள், 4 மாதங்கள் முடித்தவர்கள் எத்தனை எத்தனை நபர்கள் உள்ளனர் என்ற அவர்களது தரவுகள் முன்வைக்கப்பட்ட போது,
உடனே அமீர் அவர்கள் சொன்ன அந்த வார்த்தைகள் தான் எல்லோரையும் ஒரு கலக்கு கலக்கியது.
“உங்களில் எத்தனை பேர் எத்தனை நாள் ஜமாத் முடித்தவர்கள் உள்ளனர் என்ற தகவல்கள் எனக்குத் தேவையில்லை, அவர்களில் துஆ கேட்டு அங்கீகரிக்கப்படக் கூடியவர்கள் எத்தனை நபர்களை நீங்கள் உருவாக்கியுள்ளனர்”

எனவே நாம் எத்தனை எத்தனை தர்பியாக்களை முடித்தவர்களாக இருந்தாலும், எத்தனை நாள் ஜமாத் முடித்தவர்களாக இருந்தாலும் எமது நடைமுறை வாழ்வில் எத்தகைய மாற்றங்களை அவை ஏற்படுத்தியிருக்கின்றன என்பதுதான் அவசியம்.

No comments:

Post a Comment